27 April 2018

மனநல்லிணக்கம்!!!

தனித்துவம், சமத்துவத்தைக்
குலைக்காத வரையில்,
எதிர்ப்புகளும்
பிரதிபலிப்புகளும்
தேவைதானா...?!?

ஏன் 
எதற்கு 
எப்படி
எனத் 
தெரிய/புரிய வில்லை
ஆனால்,
ஏனெனினும் 
எதற்கெனினும் 
எப்படியெனினும்

மதங்களுக்கு, மதம் தேவைதானா?!?

தேவை,
மனநல்லிணக்கமே அன்றி,
மதநல்லிணக்கம் அல்ல

நமக்குள்,
முக்காட்டைச் சாக்காட்டிச்,
சாக்காடு தேவைதானா?!?

மக்குகளாய் இல்லாமல்
மாக்களாய்ச் சிந்திப்போம்

இல்லையென்றால்,
சிந்திப் போகும் இரத்தத்தில்
சிதறிப் போகும் நித்திலம்!!!

No comments:

Post a Comment