14 February 2021

என் காதலர்தினம் கள்...

2021
பல காதல்களை
உயிர்ப்பித்துப்
‘பாடிய நிலா பாலு’
இல்லாமல்
இது முதல்
காதலர் தினம் கள்!

சமர்ப்பணம்!!!

காதல்!

பருவ மனங்களில் 
புதிதாய்ப் பூக்கட்டும். 
அவர்கள்,
புதிதாய்க் கொண்டாட்டும்.

ஆனால்,
நாம் உயிராய்
உருவான அகம் களில்
கருகிடாமலும்
கருக்கப்படாமலும்
இருந்தாலே
உயிர்ப்பாய் இருக்கும்.

நம் இல்லங்களில்
நம் உறவுகளில்
முதலாய்
முழுமையாய்
நிரம்பி இருக்கட்டும்,

காதல்!

“காதலர் தின நல்வாழ்த்துகள்”

2019
உரசிக் கொண்டவை,
பார்வைகள் 
மட்டும் என்றாலும்,
காலங்கள் 
கடந்துபோன பின்னும்,
இதயத்தினுள் இன்னமும்,
பொறிகளாய் என்றாலும்
ஒளிர்ந்து கொண்டிருந்தால்,
இணைந்திருந்தாலும் இல்லாவிட்டாலும்,
அது,
உண்மையான ‘காதல்’ தான்...

“காதலர் தின நல்வாழ்த்துக்கள்”

2017
உனது என்றாகையில்
தயக்கம், தியாகம்  வேண்டாம்.
உனதே என்றானதும்
குரோதம், துரோகம் வேண்டாம்.

காதல் இல்லா வாழ்வாகாமல்,
காதல் இல் வாழ்வாக,

"காதலர் தின நல்வாழ்த்துக்கள்"

2016
தொடர்வதெல்லாம் வென்றதுமல்ல..,
தொடராததெல்லாம் தோற்றதுமல்ல...

இணைந்ததெல்லாம் உண்மையுமல்ல..,
இணையாததெல்லாம் பொய்யுமல்ல...

"காதலர் தின நல்வாழ்த்துக்கள்"

2015
மனம் இடம் கொடுத்த காதல்,
தொடர்ந்தும் வடம் பிடிக்கட்டும்...
மனம் விடம் கொடுத்த காதல்,
தொடராது தடம் பிறளட்டும்...

இருமனங்களிலும்
இருக்கட்டும் திடம்...
இல்லாமல் இருக்கட்டும் வேடம்...

"காதலர் தின நல்வாழ்த்துக்கள்"

2014
இன்று காதலர் தினம்...
இன்று மட்டும் காதலிக்காதீர்கள்..,

இன்று'ம்' காதலியுங்கள்...
என்றும் காதல் அளியுங்கள்...

"காதலர்தின நல்வாழ்த்துக்கள்"

2013
கண்ணீர்த் துளி..,
பு(மெ)ன் சிரிப்பு..,
இரண்டிலும் சொல்லலாம்
காதலின் 
சுகத்தையும் சோகத்தையும்...

"காதலர் தின வாழ்த்துக்கள்"

2012
காதல் கொண்ட காதலர்க்கும்,
காதல் கொன்ற காதலர்க்கும்,
காதல் கொள்ளப்போகின்ற காதலர்க்கும்,
காதல் கொல்லப்போகின்ற காதலர்க்கும்,
காதலர் தின நல்வாழ்த்துக்கள்...

2011
காத்திருந்து
தவித்து
இல்லாமற்போகாமல்
இல்லறமாகட்டும்
காதல்...
“காதலர்தின நல்வாழ்த்துக்கள்”